/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மேலவை உறுப்பினர் பதிவு பேரவை நிர்வாகிகள் கோரிக்கைமேலவை உறுப்பினர் பதிவு பேரவை நிர்வாகிகள் கோரிக்கை
மேலவை உறுப்பினர் பதிவு பேரவை நிர்வாகிகள் கோரிக்கை
மேலவை உறுப்பினர் பதிவு பேரவை நிர்வாகிகள் கோரிக்கை
மேலவை உறுப்பினர் பதிவு பேரவை நிர்வாகிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2010 02:12 AM
கோத்தகிரி : தமிழக அரசின் மேலவை உறுப்பினராக, தாயகம் திரும்பியோரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட தாயகம் திரும்பியோர் பேரவை நிர்வாகிகள் கூட்டம், கோத்தகிரியில் நடத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் ரத்தினம் வரவேற்றார். நவம்பர் மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட தாயகம் திரும்பியோர் குடியிருப்புகளுக்கு மாற்றாக, புதிய வீடுகள் கட்டித் தருவதுடன், அனைத்து கிராம வீடுகளுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்: டான்டீ குடியிருப்புகளை சீரமைத்து கழிப்பிடம் மற்றும் மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்துவதுடன், வாரிசுகளுக்கு கல்வி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்; தாயகம் திரும்பியோருக்கு தனி நலவாரியம் அமைத்து தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.கோத்தகிரி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தி நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்; தமிழக அரசின் மேலவை உறுப்பினராக, தாயகம் திரும்பியோரை நியமிக்க வேண்டும்; மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் தாயகம் திரும்பியோர் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் ஒன்றரை லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்; தாயகம் திரும்பியோர் குடும்பத்துக்கு, அரசு அறிவித்த இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலர் தம்பிராஜா தலைமை வகித்தார். மாநில துணை செயலர்கள் சிவா, சுந்தரம்பாள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கப் பிள்ளை, தொழிற்சங்கத் தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை ரெப்போ வங்கி இயக்குனர் மகாலிங்கம், சென்னை பங்குதாரர் நலச் சங்கத்தை சேர்ந்த தனபால், கோவை மாவட்ட பேரவை பொருளாளர் சாஸ்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.